அரசு தொடக்கப்பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி

வாழப்பாடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்து குழந்தைகள் அசத்தினர்.
கணினி அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டவர்களை படத்தில் காணலாம்.
கணினி அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். 

ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன், முத்தம்பட்டி பால்பண்ணை தொழி–லதிபர் கோபால்சுவாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை திறந்து வைத்தனர்.

இந்த கண்காட்சியில், கணினியின் பழைய மற்றும் புதிய பாகங்கள், கேமி–ராக்கள், அச்சுப்பொறிகள் ஆகியவற்றை காட்சிப்ப–டுத்தி வைத்திருந்த மாணவ–-மாணவிகள், கணிப்பொறியின் பரிணாமம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்து அசத்தினர். நிறைவாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com