

சேலம்:
சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருப்பவர் கிறிஸ்துராஜ் (வயது 44). இவர் இன்று அதிகாலை திடீரென வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வி.ஐ.பி. அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பரிசோதனைகளையும் செய்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்க நிலை ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்றிரவு அவர் தாமதமாக தூங்க சென்றதாகவும், இதனால் ஏற்பட் சோர்வால் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் டீன் வள்ளிசத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.