மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி தாள் 2, 3 தேர்வு முடிவுகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி தாள்2, 3 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
.
.
Published on

சேலம்:

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு 2020 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதையடுத்து தாள்1 தேர்வு நடத்தப்பட்டது. 

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாள்-2 தேர்வு கடந்த ஜனவரி மாதம் 28, 29 மற்றும் பிப்ரவரி மாதம் 3-ந்தேதி ஆகிய நாட்களில் கணினி வழியாகவும், தாள்3 தேர்வு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி காகிதம் முறையிலும் நடைபெற்றது.

இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பலர் எழுதினர்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  உதவி தணிக்கை அதிகாரி, ஜூனியர் பதவிகளுக்கு தனி கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இறுதி விடைகள் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி  அன்று ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அன்று தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆகவே அடுத்த மாதம் 5-ந்தேதி  முதல் 26-ந்தேதி வரை பதிவு எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து  தங்களின் தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com