16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமண செய்த வாலிபர்

சங்ககிரி அருகே 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை கடத்திச் திருமணம் செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
.
.
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கடந்த 17-ந்தேதி திடீரென மாயமானார். பெற்றோர்கள் அக்கம், பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனையடுத்து சிறுமியின் தாய்  சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். 

 அதில்,  அய்யனாரப்பன்(35) என்பவர் தனது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததாகவும், தனது மகளுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், தனது மகளை மீட்டு அய்யனாரப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரலேகா சிறுமியை திருமணம் செய்த அய்யனாரப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com