சேலம் மாவட்டத்தில் 119 கிராம உதவியாளர் பணியிடங்கள் வருகிற 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 119 கிராம உதவியாளர் பணியிடங்கள்  வருகிற 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Published on

சேலம்:

தமிழக அரசு 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் எடப்பாடி-2, கெங்கவல்லி-2, காடையாம்பட்டி-3, மேட்டூர்-12, ஓமலூர் -8, பெத்தநாயக்கன் பாளையம்-11, சேலம்-15, சேலம் தெற்கு-28, சேலம் மேற்கு-8, சங்ககிரி-7, தலைவாசல்-5, வாழப்பாடி-12, ஏற்காடு-6 ஆகிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. https://cra.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 7-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பம் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விவரங்களை சேலம் மாவட்ட நிர்வாக இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com