தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற இருவர் கைது

ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற இருவர் கைது
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com