ஆவின் பாலகம் அமைத்து தருவதாக கூறிரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தி.மு.க பிரமுகர் மகன் மீது புகார்

சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.
ஆவின் பாலகம் அமைத்து தருவதாக கூறிரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தி.மு.க பிரமுகர் மகன் மீது புகார்
Published on

சேலம்:

சேலம் சாமிநாதபுரம் அர்த்தனாரி தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நான் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறேன். சேலம் தி.மு.க. பிரமுகரின் மகன் சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.

மேலும் அங்கு வேறு ஒருவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்.

இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தி.மு.க பிரமுகரின் மகனிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com