மணிப்பூர் விவகாரம் ஏற்காட்டில் அமைதி ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஏற்காடு:

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.

இந்த பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி டவுன் மார்க்கெட், பஸ் நிலையம் வழியாகச் சென்று ஒண்டிக்கடை ரவுண்டானா அருகில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணி குறித்தும் பேரணி எதற்காக நடைபெற்றது என்று குறித்தும் விளக்கி பேசினர்.

மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர். இந்த பேரணியில் ஏற்காட்டில் உள்ள பள்ளி குழந்தைகள், கிறிஸ்தவ சபையை சேர்ந்த தலை வர்கள், இஸ்லாமிய தலை வர்கள், இந்து மத முக்கி யஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com