சேலம் அருகே மினி லாரி மோதி கருவாடு வியாபாரி சாவு

எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.
சேலம் அருகே மினி  லாரி மோதி கருவாடு வியாபாரி சாவு
Published on

சேலம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தீவட்டிப்பட்டி சமத்துவ புரம் அருகே சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி பாப்பாத்தி (62) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com