கொளத்தூர் வாலிபரிடம் ரூ.6 லட்சத்து 71 ஆயிரம் மோசடி

ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
கொளத்தூர் வாலிபரிடம் ரூ.6 லட்சத்து 71 ஆயிரம் மோசடி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com