ஆத்தூர் அருகே டாக்டர் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார்.தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆத்தூர் அருகே  டாக்டர் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
Published on

சேலம்:

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

நேற்று பிற்பகல் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்நது செல்வகுமாரின் தந்தை வையாபுரி மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வ குமாரின் மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்ததும், தற்போது அவர் வேலூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருவதும், மகள் சென்னையில் படித்து வரும் நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக இருந்த செல்வகுமார் மன வேதனையில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.  

X

Maalai Malar
www.maalaimalar.com