சேலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.
சேலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com