search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்   அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்கம்
    X

    நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்கம்

    • 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறுகிறது.
    • மேலாண்மை இயக்குநருமான மீராபாய் மற்றும் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கூட்டுறவு கொடியேற்றி விழாவினைதொடங்கி வைத்தார்கள்.

    சேலம்:

    69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு கொடியேற்று விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான மீராபாய் மற்றும் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கூட்டுறவு கொடியேற்றி விழாவினைதொடங்கி வைத்தார்கள்.

    சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் கூட்டுறவு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. இதில் சேலம் சரக துணைப்பதிவாளர் முத்துவிஜயா, ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா, இணைப்பதிவாளர் அலுவலகம் பணியாளர் அலுவலர் மற்றும் துணைப்பதிவாளர் குணசேகர், பால்வளத்துறை துணைப்பதிவாளர் செந்தில்குமார், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் கிருஷ்ணன், டான்பெட் துணைப்பதிவாளர் பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ராஜவேலன், வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரன், வங்கி உதவி பொது மேலாளர்கள், மேலாளர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×