search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்திய காட்சி. அருகில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., வி.பி.துரை மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். 

    முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி

    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • மரணமடைந்த வேல்துரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    அதனை அறிந்ததும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தற்போதைய செகந்திராபாத் பாராளு மன்ற தொகுதியின் பொறுப் பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரு மான ரூபி மனோகரன் எம்.எல்..ஏ. உடனடியாக நெல்லை திரும்பினார். மரணமடைந்த வேல்து ரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளையங்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், களக்காடு கிழக்கு வட்டார பொறுப்பாளர் பானு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், கவுன்சிலர் மரிய சாந்தி, முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் நிர்வா கிகள் சித்திரைவேல், ஆனந்த ராஜன், தாழைகுளம் ராஜன், நந்தகோபால், பிலியன்ஸ், ஸ்ரீதேவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×