தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை நடக்கிறது

தருமபுரியில் நாளை மாலை 3 மணியளவில் அணிவகுப்பு பேரணி தருமபுரி குமாரசாமிபேட்டையில் தொடங்குகிறது.ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.
தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை நடக்கிறது
Published on

தருமபுரி,

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நாளை (16-ந் தேதி) மாலை 3 மணியளவில் இந்த அணிவகுப்பு பேரணி தருமபுரி குமாரசாமிபேட்டையில் இருந்து தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து 4ரோடு, தபால் நிலையம் வழியாக பி.எஸ்.என்.எல். வந்தடையும், அதன்பின்னர் அந்த பேரணி காந்தி நகர் வழியாக பை-பாஸ் சாைல அடைந்து மீண்டும் 4ரோடு வழியாக வந்து குமாரசாமிபேட்டை வந்தடையும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்.

அதன்பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பொதுகூட்டம் நடைபெறுகிறது.

இந்த பேரணியில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தருமபுரி பகுதி முழுவதும் போலீசார் பலத்த வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் தருமபுரி, 4ரோடு, குமாரசாமிபேட்டை, ஒட்டப்பட்டி, பாரதிபுரம், மதிகோண்பாளையம் ஆகிய பகுதிகள் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com