search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உடன்குடி பகுதியில் ரூ.69 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்  -  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டிய போது எடுத்தபடம்.

    உடன்குடி பகுதியில் ரூ.69 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    • சீயோன் நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் வெள்ளாளன் விளை ஊராட்சி சீயோன் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம், சீர்காட்சி ஊராட்சி காமராஜ்நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையிலும் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி னார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெள்ளாளன் விளை ராஜரத்தினம், சீர்காட்சி கருணாகரன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், சீர்காட்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட, நிர்வாகிகள் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், சசிகுமார், கிதியோன், பிரவீன், சற்குணராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×