search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ரூ.50 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - மாநகராட்சி கூட்டத்தில் மேயர்  அறிவிப்பு
    X

    தூத்துக்குடியில் ரூ.50 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம்

    தூத்துக்குடி மாநகராட் சிக்கு சொந்தமான தருவைக் குளம் உரக்கிடங்கு மற்றும் ஜோதி நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான எந்திரங்கள் மற்றும் கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகளை ரூ.1 கோடியே 83.50 லட்சம் மதிப்பீட்டில் 15-வது நிதி குழு மானியம் 2023 -24 நிதியில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ.60 லட்சத்தில் 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கு துறை சார்ந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சங்கரபேரி பகுதிகளில் தேங்கும் மழை நீரினை வெளியேற்ற செய்யும் வகையில் பெரிய பள்ளம் ஓடை வரைலான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. 15-ம் நிதி குழு மானியம் 2022-23 ஆண்டு நிதியில் தூத்துக்குடி மாநகர பகுதியில் குடிநீர் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் என மொத்தம் 13 பணிகள் ரூ. 5 கோடியே 68 லட்சத்தில் மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சுத்திகரிப்பு நிலையம்

    மாநகராட்சி வல்லநாடு கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், மாநகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றின் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு இயக்குதல் நிர்வாகப் பணிகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் செலவினத் தொகை மொத்தம் ரூ. 59 லட்சம் அனுமதிக்கும் நடவடிக்கை,

    மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் வணிக வளாக கடை ஒப்பந்தம் கோரியவர்களுக்கு உரிமம் வழங்குதல், வடக்கு மண்டலம் அம்பேத்கர் நகரில் ரூ. 28.87 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா சிறப்புகள் பராமரிப்புகள் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்குகுழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் ,கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமிசுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரி கணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×