நெல்லையில் டிராக்டர் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி -வேளாண் ஊழியர் உட்பட 2 பேர் மீது வழக்கு

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில்  டிராக்டர் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி -வேளாண் ஊழியர் உட்பட 2 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் சேரன்மகாதேவி வேளாண்மை துறையில் வேலை செய்து வரும் ஒருவர் மானியத்தில் டிராக்டர் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதற்காக முத்துராமன் ரூ.4 லட்சத்தை பாளையில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கட்டி யுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் வேளாண் ஊழியர் டிராக்டர் வாங்கி கொடுக்கவில்லை.

மேலும் இது குறித்து வேளாண் ஊழியரிடம் முத்துராமன் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துராமன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com