பாளையில் அரசு சித்தா டாக்டர் வீட்டில் ரூ.30 ஆயிரம் திருடிய பணியாளர் கைது

பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
பாளையில்  அரசு சித்தா டாக்டர் வீட்டில்  ரூ.30 ஆயிரம் திருடிய பணியாளர் கைது
Published on

நெல்லை:

பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்.

சித்தா டாக்டர்

இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

ரூ.30 ஆயிரம் திருட்டு

இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து விடுப்பில் சென்றதால் வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த சங்கர்( 34) என்பவர் கடந்த 3 நாட்களாக அவரது வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களது வீட்டில் சம்பவத்தன்று ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போனது.

கைது

இது குறித்து திலகவதி ஐகிரவுண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பணத்தை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com