என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
    X

    தூத்துக்குடியில் மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

    • தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதி குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
    • சாகுல்அமீது கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதியில் குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது(வயது 45).இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம்போல நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் சாகுல் அமீதுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×