search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை
    X

    அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை

    • பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.16 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஐயப்பன் (வயது 56). இவர் பெங்களூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இந்த நிலையில் ஐயப்பன் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    இதையடுத்து சொந்த ஊரான மாப்பிள்ளை நாயக்கன்பட்டிக்கு வந்து குடும்பத்துடன் ஓரிருநாட்கள் தங்கி இருந்தார் . பின்னர் வீட்டை பூட்டி விட்டு விஜயவாடாவுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர்.

    இதற்கிடையே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது குறித்து ஐயப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×