என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சையில், பழைய மாவட்ட கலெக்டரக அருங்காட்சியகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு
- பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
- பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பழைய மாவட்ட கலெக்டரக அருங்காட்சியகத்தில் பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடைபெறும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து தஞ்சை அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டு அறிந்தார்.
இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
Next Story






