பண்ருட்டியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி விஷம் குடித்து தற்கொலை

கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி .வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பண்ருட்டியில்  ஓய்வு பெற்ற அரசு அதிகாரி  விஷம் குடித்து தற்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி சேர்ந்தவர்கல்யாணசுந்தரம் (72),இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஆவார்.இவர்நீண்ட நாட்களாகவயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. நேற்று காலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com