search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு சந்தா விவகாரம் - போலீஸ் நிலையத்தில் புகார்
    X

    குடியிருப்பு சந்தா விவகாரம் - போலீஸ் நிலையத்தில் புகார்

    • குடியிருப்புகளுக்கு தலா ரூ.200 சந்தா தொகை வசூலிக்கப்படுகிறது.
    • அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடை முறைபடுத்த முடியும் என்றார்.

    அவினாசி :

    நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் மூலம் அவினாசி சூளை பகுதியில் 448 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது .இங்கு நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், சோலை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டு சங்கம் மூலம் குடியிருப்புகளுக்கு தலா ரூ.200 சந்தா தொகை வசூலிக்கப்படுகிறது.

    இந்தத் தொகை மூலம் அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்புகுடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தினர் குடியேறி உள்ளனர்.அவர்களிடம் சங்க நிர்வாகிகள் 8 மாத சந்தா தொகை கேட்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு குடிவந்த நபர் நீங்கள் கேட்கும் தொகை தர முடியாது . 2 மாத தொகை மட்டும்தான் தருவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் அந்த வீட்டின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதை அறிந்த அந்த நபர் அவினாசி போலீஸ் நிலையத்தில்புகார்கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து குடியிருப்போர் நலசங்க பொருளாளர் சையத் முகமது கூறுகையில், இங்குள்ள வீடுகளுக்கு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி ஆகியவற்றிற்காக குடிசை மாற்றுவாரிய சட்டதிட்டத்திற்குட்பட்டு தான் சந்தா தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை இங்கு பராமரிப்பிற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. அனைவரும் ஒத்துழைத்தால்தான் நம் குடியிருப்பு நம் பொறுப்பு செயல்படுத்தி குடியிருப்புவாசிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைபடுத்த முடியும் என்றார்.

    Next Story
    ×