என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி போல் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- வடமாநில இளம்பெண் மீட்பு
போரூர்:
வடபழனி, வெள்ளாளர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.
இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 2 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் அங்கிருந்த வடமாநில இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சென்று வீட்டின் உரிமையாளரிடம் தம்பதிகள் போல நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்பது தெரிந்தது. தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






