search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் சபரிமலை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோரிக்கை
    X

    குற்றாலத்தில் சபரிமலை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோரிக்கை

    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு சமைப்பதற்கான இடம் , கழிப்பிட வசதி செய்ய வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
    • அதன் நகல்களை குற்றாலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றாலநாதர் சுவாமி கோவில் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையரிடமும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமையில் குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான காலி யிடங்களில் சபரிமலை அய்யப்ப சீசனை முன்னி ட்டு கடை நடத்து வதற்கான ஏலத்தினை முறைப்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், வரக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு சமைப்ப தற்கான இடம் , கழிப்பிட வசதி செய்ய வலியுறுத்தியும் இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணை யருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

    அதன் நகல்களை குற்றாலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றாலநாதர் சுவாமி கோவில் அலுவல கத்தில் உள்ள உதவி ஆணை யரிடமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் தென்காசி நகர தலைவர் முத்துராஜ், நகரச் செய லாளர் ராஜா, தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் பேச்சி முத்து மற்றும் ஊடக ப்பிரிவு மாவட்ட தலை வர் செந்தூர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அசோக் பாண்டியன், பாரதீய ஜனதா கட்சி முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் பிலேவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×