வண்டல் மண் எடுக்கும் வழிமுறையை எளிதாக்க வேண்டுகோள்

குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.நடைமுறை சிக்கல்களை தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளசில குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் வேளாண் துறை அனுமதி பெறுவது, பொக்லைன் மற்றும் லாரி வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்துவது எனபல்வேறு கெடுபிடிகள் செய்யப்படுகிறது. மண் எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் விவசாயிகள் மண் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் நடைமுறை சிக்கல்களை தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில்நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உடுமலை வட்டார விவசாயிகள், கோரிக்கை விடுத்து பருவமழை துவங்கும் முன்னதாக நிபந்தனையற்ற அனுமதி வேண்டுமென மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com