search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி.சேகர், நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் சாந்தி உள்ளார்.

    குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • வண்ண வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி,

    மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் அனிதா முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் குணசேகரன், சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் அனைத்து மாவட்ட மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வண்ண வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ராஜகோபால், மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பேரூராட்சியில் தலைவர் பி.சி.ஆர். மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உனக்காக நல்லாம்பட்டி அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது.முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் நன்றி கூறின

    Next Story
    ×