கொடிமா கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்: சிவக்குமார் எம்.எல் .ஏ.வழங்கினார்

முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் நிவாரணம் வழங்கிஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கிய போது எடுத்த படம்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கிய போது எடுத்த படம்.
Published on

விழுப்புரம்:

மயிலம் அருகே கொடிமா கிராமத்தை சேர்ந்த முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் அரிசி ,மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பிளாஸ்டிக் குடம், பக்கெட் பாய், தலையணை, வேட்டி, சேலை பெட்ஷீட், காய்கறி கள், மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் ரூ. 3 ஆயிரம் பணம் நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ம.க. மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம் ஒன்றிய தலைவர் இளவழகி மற்றும் கட்சி நிர்வாகிகள் செங்கேணி, ஆட்டோ தேசிங்கு, ஜீவா, பாலு, தனசேகர் தன்ராஜ், ராஜா, முனுசாமி, ஜெய மூர்த்தி சரவணன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com