search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  - கலெக்டரிடம் மனு
    X

    தென்காசி மாவட்டத்தில் பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

    • தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
    • தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்த னர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் பனை மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போய் கொண்டு இருக்கிறது.

    குறிப்பாக 50 முதல் 60 ஆண்டு காலம் வரை வளர்க்கப்பட்ட பனை மரங்கள் கருகி வருகின்றன. பனை மரங்கள் பட்டுப்போனால் வறட்சி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

    அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் பனைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள். மீண்டும் இந்த இடத்தில் பனை விதை வைத்து வளர்த்து பலன் தருவதற்கு சுமார் 25 ஆண்டு காலம் ஆகும்.

    அதனால் பட்டுப்போன பனை மரங்களை கணக்கெடுத்து நிவாரணமாக ஒரு பனை மரத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .

    சிறுதானியங்கள் விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்கள் கருகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாநில துணைத் செயலாளர் ஜாண் டேவிட், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் சாம்பவர்வடகரை கிளை செயலாளர் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்

    Next Story
    ×