இந்தியாவை மதசார்பற்ற தேசியமாக பேணிக்காப்பதே மகாத்மாவுக்கு செலுத்தும் உண்மையான காணிக்கை: விஜய் வசந்த் எம்.பி.

இந்திய தேசத்தை ஒரு மதசார்பற்ற தேசியமாக பேணிக்காப்பதும் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதும்தான் நாம் மகாத்மா காந்தி அவர்களுக்கு செலுத்தும் உண்மையான காணிக்கை என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விஜய் வசந்த் எம்.பி.
விஜய் வசந்த் எம்.பி.
Published on

நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மகளிரின் சுய உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக்காகவும் தனக்கான முறையில் போராடி வெற்றி கண்ட அண்ணல் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். 

இந்தியாவின் மதச்சார்பின்மை கோட்பாட்டை வலுப்படுவதற்காக மகாத்மா காந்தி எடுத்த முயற்சிகளை தோற்கடிக்கும் விதமாக வகுப்புவாத சக்திகள் அவரை கொலை செய்தனர்.

இந்திய தேசத்தை ஒரு மதசார்பற்ற தேசியமாக பேணிக்காப்பதும் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதும்தான் நாம் மகாத்மா காந்தி அவர்களுக்கு செலுத்தும் உண்மையான காணிக்கை. காந்தியடிகள் கற்றுத்தந்த கோட்பாடுகளும் கொள்கைகளும் நமது இந்த போராட்டத்தில் நமக்கு துணை  நின்று வழிகாட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com