என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
    X

    தியாகதுருகம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

    • இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்தபாபு (29) மாணவியின் வீட்டிற்குள் சென்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆனந்தபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×