search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எம். கிசான் திட்ட உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம்
    X

    பி.எம். கிசான் திட்ட உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம்

    • வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
    • வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கூறியதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி. மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊக்கத்தொகை வருவது நிறுத்தப்படும்.

    எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×