ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மின்சார தகனமேடை பணிக்கு பூமிபூஜை

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மின்சார தகனமேடை பணிக்கு பூமிபூஜை
Published on

ஆற்காடு:

ஆற்காடு பாலாற்றங்கரை யில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மின்சார தகனமேடை கட்டபட்டுள்ளது.

இந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் முன்புறம் இருப்பு கூரை அமைத்தல், சுற்றுசுவர் உயரம் அதிகரித்தல், பாலாபிஷேக மண்டபம், அவரச ஊர்தி வாகனம் நிறுத்தம் கொட்டகை ஆகிய விரிவாக்க கூடுதல் பணிகள் செய்யப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழாவிற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பளவக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com