என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுகுடி ஊராட்சியில்  கிராமசபை கூட்டம்
    X

    சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் போதும் பொன்னு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசுல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் வரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த சார் ஆட்சியர் விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    Next Story
    ×