search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
    X

    கடலாடி வட்டம் உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சிகளில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

    கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

    • ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
    • இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

    மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×