குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு

குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. மகன் கைது செய்யபட்டார்.
குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதன குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 60). இவர் பருத்தி விற்ற பணத்தை முதல் மனைவியின் மகன் பழனிசாமி (28) குடிப்பதற்காக கேட்டார். ராமர் கொடுக்க மறுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராமரை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மனைவி வள்ளி (45) கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com