மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் யோகம் பொது சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 1,610 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்தமிழ்ச்செல்விபோஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, தொண்டு நிறுவன இயக்குநர் தமயந்தி முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.

இதில் வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ்மணிராஜ், ஷியாம் பரணிதரன், வனச்சரக அதிகாரி பால்பாண்டியன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com