சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது

இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு கீழக்கரை நகர் தி.மு.க.செயலாளர் பஷீர் அகமது தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்.
இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு கீழக்கரை நகர் தி.மு.க.செயலாளர் பஷீர் அகமது தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்.
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சிறப்பான கல்வி, விளையாட்டுகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் தாளாளராக இருந்து வரும் வழக்கறிஞர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கடின உழைப்பு, இளம் மனங்களின் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்த உதவியது, கற்றல் முறைகளைப் புதுமைப்படுத்த கையாண்ட உத்தி, கல்வித் துறையில் புதிய மைல் கற்களை அடைய உதவிய புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்காக சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி டெல்லி சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிமிற்கு நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கீழக்கரை முன்னாள் நகர்மன்ற தலைவரும், கீழக்கரை தி.மு.க. செயலாள ருமான பஷீர் அகமது, தி.மு.க.மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹூசைன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை அ.தி.மு.க. அவைத்தலைவர் சரவண பாலாஜி, கவுன்சிலர்கள் முகம்மது காசிம் மரைக்காயர், எஸ்.கே.வி.சுகைபு, நசிருதீன், மீரான் அலி, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முகமது முஸ்தபா, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தன லட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரி யர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வியா ளர்கள், சமூக நல அமைப்பி னர் உள்பட 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்த னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com