search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு-மாவட்ட தலைவர் தகவல்
    X

    கதிரவன்

    சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு-மாவட்ட தலைவர் தகவல்

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா தலைவர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். அவர் நாளை (13-ந்தேதி) மாலை ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.

    அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மரிச்சுக்கட்டியில் மாலை 6 மணிக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு குமரையா கோவில் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் தங்குகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை 60 கி.மீ., தூரம் சாலையின் இருபுறமும் மூவர்ண தேசிய கொடிகள் கட்டி பறக்க விடப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14-ந்தேதி காலையில் மூவர்ண தேசிய கொடியுடன் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து கோதண்டராமர் கோவில் வரை கடலை சுற்றி வருகிறார்.

    அதன் பின்பு பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து 75 தேசிய கொடி ஏந்தி 75 நாட்டுப்படகில் குந்துகால் செல்கிறார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு சென்று விட்டு குந்துகால் வந்து இறங்கிய போது மன்னர் பாஸ்கர சேதுபதி எவ்வாறு வரவேற்பு அளித்தாரோ? அதே போன்று வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.பின்பு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநில தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு அருந்து கின்றனர்.

    குந்துகால் பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், பூத் சஷக்திகரன் பொறுப்பாளர்கள் கூட்டம், பிரவாஸ் யோஜனா பொறுப்பாளர்கள் கூட்டம் முடித்து விட்டு மாலை 5.30 மணி அளவில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் நாட்டுபடகு மீனவ பிரதிநிதிகளை சந்தித்து விட்டு அவர் சென்னை திரும்புகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×