1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Published on

ஆர்.எஸ்.மங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையில் அதிகாரிகள் சிலுக வயல் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பையில் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி டிரைவர் பார்த்திபனூர் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(27) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீடுகளில் ரேசன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தி செல்வதாக கூறினார். இது தொடர்பாக குற்றப்பு லனாய்வு பிரிவு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ ரேசன் அரிசி திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com