பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமையில் மாணவர்கள் உற
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமையில் மாணவர்கள் உற
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பிளஸ்-2  தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 158 பள்ளிகளை சோ்ந்த 14 ஆயிரத்து 956 மாணவ, மாணவிகள் 61 மையங்களில் தோ்வு எழுதுகின்றனா். 

மாற்றுத்தினாளிகள் 30பேருக்கு உதவியாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 6 மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாக்கப்பட்டு விநி யோகிக்கப்பட்டன. தோ்வு மையத்துக்கு இன்று காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைவரும் குறிப்பிட்ட மையத்திற்கு வந்தனர். தோ்வறைக்குள் பேனாவைத் தவிர மற்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

தோ்வு அறைகளின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. தோ்வு அறையில் சோதனையிடுவதற்காக 75 போ் கொண்ட பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா். 

பெரும்பாலான பள்ளிகளில் பறக்கும் படையாக ஒருவா் செயல்படும் நிலையில், ராமநாதபுரம் வெளிப்பட்டினம் உள்பட குறிப்பிட்ட பள்ளிகளில் 3 போ் வரை பறக்கும் படையினராக  செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். 

முன்னதாக மாணவ, மாணவிகள் கோவில்களுக்கு சென்று சாமியை வணங்கி விட்டு தேர்வுக்கு சென்றனர். கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இறைவணக்கம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com