

கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தை சேர்ந்தவா¢ அமீன். இவர் சென்னையில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி யாஷ்மின் ஷமீனா (வயது 32) குழந்தைகளுடன் பள்ளமோர்க்குளத்தில் வசிக்கிறார்.
அவர் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு மாம நபர் வீட்டுக்குள் வந்து, யாஷ்மின் ஷமினா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார்.
உடனே யாஷ்மின் ஷமீனா கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அந்த மர்ம நபர் மீது வீசினார். அப்போது அந்த மர்ம நபர் தனது செல்போனை தவறவிட்டு, அங்கிருந்த மற்றொருவருடன் சேர்ந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து யாஷ்மின் ஷமீனா கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது வேதாளை பகுதியை சேர்ந்த வாசுதேவன் (39), சிவகங்கை மஜீத் சாலை பகுதியை சேர்ந்த பால்பாண்டி (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிவகங்கையில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து யாஷ்மின் ஷமீனாவின் தங்க செயின் மீட்கப்பட்டது. கைதான 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் இருவரும் ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர்.