ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீர் ; நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில தேங்கும் நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அருகே தரைப் பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
ஊத்தங்கரை அருகே தரைப் பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் ரெயில் வே தரைப்பாலம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க., ஆட்சி யில் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மழைக்கா லங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரை கடந்த செல்லும் பொழுது பழுதாகி நிற்பதும், போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.

காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தரை பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நிரந்தர மான நடவடிக்கை எடுக்க கோரி சாமல்பட்டி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அனைத்து கடைகளையும் இன்று அடைத்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், அதிமுகவினர், வணிகர் சங்க அமைப்பினர் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com