search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
    • பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    சுவாமிமலை:

    உலக வெறிநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணத்தில் 'ஒன் ஹெல்த்ஜீரோ டெத்' அடிப்படையில் அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

    ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன், கால்நடை மருத்துவமனையில் டெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமில் டெல்டா இன்னர் வீல் கிளப் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன், துணைத்தலைவர் வச்சலா கருப்பண்ணன், துணைச் செயலாளர் லட்சுமி பிரபாகரன், பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன், இதழாசிரியர் சந்திரா, ஐஎஸ்ஓ ஜெயந்தி, உறுப்பினர்கள் வைத்தியநாதன், பிரேமா பாலு மருத்துவ ஷெரின் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ், ரகுநாத், யாழினி தேவி, தேவ பிரசன்னா, கால்நடை ஆய்வாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிவேல், மதியழகன், கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    Next Story
    ×