search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் தின விழா கருத்தரங்கம்
    X

    மகளிர் தின விழா கருத்தரங்கம்

    • புதுக்கோட்டையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணியுடன் நடைபெற்றது
    • பெண்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு முன்னேறி வரவேண்டும் என்று உறுதி

    புதுக்கோட்டை,

    சிஐடியு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புதுக்கோட்டை யில் உலக மகளிர் தினவிழா பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் கலந்து கொண்டு மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் சிறப்புரையாற்றினார்.அனைத்திலும் பெண்களுக்கு 50விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும். முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பது கிடையாது. ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் அளித்து வஞ்சிக்கப்படுகிறோம். கேரளாவில் சம வேலைக்கு சமஊதியம்வழங்கும்போது தமிழகத்தில் ஏன் சாத்தியம் இல்லை என்றார்.கருத்தரங்கிற்கு சிஐடியு மாநில செயலாளர் எஸ்.தேவமணி விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி மாதர் சங்க மாவட்டச்செயலாளர் பி.சுசிலா ஆகியோர் தலைமை வகித்தனார். விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. சிஐடியுமாநில துணைத் தலைவர் எம்.லெட்சுமி ஆகியோர்சி றப்புரையாற்றினர்.விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னச்சாமி, விதொசமாவட்டப் பொருளாளர் கே.சண்முகம்ரூபவ் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்சி.மாரிக்கண்ண, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி.கிரிஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை பேருந்து நிலைத்திலிருந்து கருத்தரங்கம் நடைபெற்ற கே.எம்.மஹால் வரை பேரணி நடைபெற்றது.

    Next Story
    ×