ஆலங்குடியில் இருசக்கர வாகனம் திருட்டு

ஆலங்குடியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடியில் இருசக்கர வாகனம் திருட்டு
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை போஸ் நகரைசேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபாகரன் (வயது 40). இவர் கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்து வருகிறார். இவர் ஆலங்குடி அருகே உள்ள ஏமாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் தனது இருசக்கர வாகத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செம்பட்டி விடுதி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com