search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

    • ஆயிரக்கணக்கான பணம் கொள்ளை
    • கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருமயத்தில் ஊமையன் கோட்டை, மறவன் கோட்டை எனப்படும் கோட்டை உள்ளது. 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் கடடப்பட்ட இந்த கோட்டை இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது. இந்த கோட்டையின் கீழ் புறத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. இந்த கோட்டையின் காவல் தெய்வதாக பைரவர் விளங்குவதால் கோட்டை பைரவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஒரே பைரவர் கோயில் இதுதான். கோயிலுக்கு முன்பும் செல்லும் சாலையில் செல்வோருக்கு இவர் பாதுகாப்பாக விளங்குவதாக மக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இந்த கோயிலை கடந்த செல்வோர் தங்களது வாகனங்களை நிறுத்தி, பைரவரை பாதுகாவலாக அழைத்து வேண்டிக்கொண்டு உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும் இது போன்று ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தி காணிக்கை செலுத்துவர். இந்நிலையில் இந்த கோயிலை திறப்பதற்காக வழக்கம் போல கோயில் அர்ச்சகர் வந்துள்ளார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் திருமயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாதம் ஒருமுறை திறக்கப்படும் இந்த உண்டியலை, மர்ம ஆசாமிகள் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது. கோட்டை பைரவல் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×