கறம்பக்குடி அருகே டாஸ்மாக் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

கறம்பக்குடி அருகே டாஸ்மாக் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கறம்பக்குடி அருகே  டாஸ்மாக் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
Published on

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வளங்கொண்டான் விடுதி ஊராட்சி மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 47). இவர் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடும்பத்தில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மன வேதனை அடைந்த கருப்பையா கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கருப்பையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com