குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கல்

ஆஸ்திரேலிய தமிழ் நண்பர்கள் உதவிதெருக்களில் குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவுறுத்தல்
குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கல்
Published on

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை ஊராட்சியில் குப்பைகளை சேகரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் தமிழக நண்பர்கள் குழு சார்பில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி யாதவர் தெருவில் 50 குடும்பங்களுக்கு இல்லங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக, ஆஸ்திரேலியா நாட்டின் தமிழக நண்பர் குழு சார்பில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடைகளை திமுக நகரச் செயலாளர் ராஜா குடும்பத் தலைவிகளிடம் வழங்கி குப்பைகளை சாலைகளிலோ அல்லது பொது இடத்தில் கொட்டாமல், கூடைகளில் சேகரித்து தெருவிற்கு வாகனங்களில் வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கி ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா சாமிநாதன், சமூக ஆர்வலர் அறம் வளர் நம்பி, பாமக ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com